Sunday, December 14, 2008

Saturday, November 15, 2008

பாதையோர மரங்கள்



அமைதியாக ஓடும் இந்த
வாழ்க்கை வண்டி
பாதை மாறிப் போவதுண்டு
சிலர் வண்டி

எப்படிக் கடந்தோம்?
தெரியவில்லை
எங்கே போகிறோம்?
புரியவில்லை
இருந்தும்...
அமைதியாக ஓடுது இந்த
வாழ்க்கை வண்டி

இறந்த காலமும்
தெரியாது
எதிர் காலமும்
புரியாது
ஒவ்வொரு நாளும்
வசந்தமென வாழும்
இம்மரங்களைப் போல
வாழ்வதனால்...
அமைதியாக ஓடுது இந்த
வாழ்க்கை வண்டி

Sunday, October 5, 2008

நயகரா

பகலில் வந்த வானவில்லை
காணவில்லை....
இரவில் !


வீழ்ச்சியின் விளைவு
தோல்வியல்ல...
சக்தி !

Sunday, February 3, 2008

நிலையாமை

சருகாகி உதிரும்
காலம் வந்ததை
உணராமல்
தன் பலநிற அழகில்
ஆணவமாய் மரங்கள்!

பின் அவை பெறும்
நிலையாமையெனும்
ஞானம்!

பனிக்கூதலில் அம்மணமாய்த்
தவமிருக்கும்
அடுத்த வசந்தமெனும்
வரத்திற்காக.

Friday, February 1, 2008

காட்சியில் பிறந்த கவிதை


பனிப்பூக்களின் மரணம்

அழகின் சிகரம்

வியக்குது கைகள்

Monday, January 28, 2008

செந்தமிழ்

தேனினும் இனிய சுவையு மானது
வானினும் உயரிய புகழு மடைந்தது
தொன்மையும் இளமையும் ஒருங்கே கொண்டது
செவிக்கினிய எங்கள் தமிழ் மொழியே

கம்பன் கவி நயம் கொண்டதும்
அகிலம் போற்றும் குறளினைப் படைத்ததும்
ஐம் பெருங் காப்பியங் கண்டதும்
செவிக்கினிய எங்கள் தமிழ் மொழியே

முத் தமிழென வளர்ந்து வந்து
மூத்தோர் கையில் தவழ்ந்த தன்று
மேன்மை கண்டு நிலைக்கும் என்று
வாழ்த்திடுவோம் எம் தமிழ் மொழியினையே

Sunday, January 27, 2008

வணக்கம்

இது எனது முதல் வலைப்பதிவு.

விரைவில் என் கவிதைக் கிறுக்கல்கள் அரங்கேறும்.